எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே மதுபோதையில் தண்ணீர் லாரியை தாறுமாறாக ஓட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் இருந்து சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரியை மதுரையை சேர்ந்த அழகுராஜா என்பவர் பூந்தமல்லி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது சென்னீர்குப்பம் அருகே லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது இடித்துவிட்டு, இறுதியில் மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த தனபால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தேவி மற்றும் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்த போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும், லாரியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அழகுராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளம்பர திமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மதுவிற்பனை படுஜோராக நடைபெறுவதால் விபத்துகளும், குற்றச்செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படால் விளம்பர முதல்வர் ஸ்டாலின் நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் பச்சை பொய்யை மேடைக்கு மேடை கூறி வருகிறார்.