பேருந்து நிலையத்தில் தவற விட்ட கைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுமி - பாராட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகர் பேருந்து நிலையத்தில் பெண் தவறவிட்ட கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமியை துணை ஆணையர் பாராட்டி கௌரவித்தார்.

அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் அண்ணா நகர் டவர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அவசர கதியில் சென்றபோது கைப்பையை தவற விட்டுள்ளார். அதில் 12 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு இருந்துள்ளது. இதுகுறித்து அண்ணாநகர் கே-4  காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பூஜா என்ற சிறுமி அப்பையை கண்டெடுத்து அவரது தந்தையுடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து பூஜாவின் நேர்மையை பாராட்டி துணை ஆணையர் ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார். 

varient
Night
Day