நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டிக்கொலை - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற நபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பதை, இது போன்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன - திமுக தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்று நான்காவது ஆண்டையும் கடக்கும் நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் அதில் தோல்வியடைந்துவிட்டது -
இன்றைக்கு ஒரு நிர்வாக திறமையற்ற, தகுதியற்ற ஆட்சி நடப்பதன் மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது - திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் தமிழகம் இன்றைக்கு போதை பொருள் விற்பனை கூடாரமாக மாறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது - தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக காவல்துறை பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே பட்டப்பகலில் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் துணிச்சலோடு செயலாற்றிய, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்றைக்கு செயல்பட இயலாத வகையில் முடங்கி போய் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது - தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான சட்ட விரோத செயல்களில் திமுகவை சேர்ந்தவர்களே ஈடுபடுவதால் அவர்கள்மீது எந்தவித சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழக காவல்துறை திணறி வருகிறது - தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரோ இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை - அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை, வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்ற சிந்தனையில்தான் ஈரோட்டிற்கு பறந்து சென்று மக்களை சந்திக்கிறார் என புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார். அதேசமயம் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர், நாகை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை கொடுக்க முடியவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரியது - இதுபோன்று வாக்களித்த மக்களை நாள்தோறும் தவிக்க விட்டு, அவர்களை காப்பாற்ற தவறிய இவர்கள்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று இறுமாப்போடு பேசி வருகின்றனர் - ஆனால் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் - எனவே, திமுகவினரின் பகல் கனவு கண்டிப்பாக பலிக்காது என்பதை இந்நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது -   தமிழகத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதை தடுக்க முடியாமல் வெறும் வேடிக்கை பார்த்து வருவதை விட்டுவிட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day