தேனி: இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல்லை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர், ஆண்டிப்பட்டி காந்திநகரில் உள்ள தனக்கு தெரிந்த நபரின் வீட்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கத்தியுடன் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த மர்மநபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொன்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day