க்ரைம்
கணவனை அடித்து மனைவியின் தாலி செயினை திருடிவிட்டு தப்பியோட்டம்...
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேளாண்துறை அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்ட பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி டீச்சர் காலனியை சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர், வேளாண்மை உழவர் பயிற்சி நிலையத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது, தற்காலிக பணியாளர் தனபாலன் வருகை பதிவேட்டில் பல நாட்களாக கையெழுத்து போடாமல் இருந்ததை கண்டுபிடித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபாலன், பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டி தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதில் காயமடைந்த மனோரஞ்சிதம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான தனபாலனை தேடி வருகின்றனர்.
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...