க்ரைம்
நகை திருட்டு வழக்கு - திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது
சென்னை நெற்குன்றம் பகுதியில் வரலட்சுமி என்பவரின் 4 சவரன் நகை திருடு போன சம...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வடமாநிலத்தவர்களை தாக்கி செல்போன்களை பறித்தது குறித்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெத்திக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் கணேஷ் என்ற வடமாநில நபரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதேபோன்று பாபன்குப்பம் கிராமத்தில் வீட்டின் வெளியே அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த வடமாநிலத்தவர்களான விக்கி மற்றும் அவினாஷ்குமாரை தாக்கி அதே கும்பல் செல்போன்களை பறித்து சென்றுள்ளது. இதுகுறித்த புகாரில் அப்பகுதி பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் சிப்காட் போலீசார் கார்த்திக், அபினேஷ், சந்தோஷ் மற்றும் மாணவன் நரேஷ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியில் வரலட்சுமி என்பவரின் 4 சவரன் நகை திருடு போன சம...
வரலாறு காணாத புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆ?...