திமுக பிரமுகர் தூண்டுதல் - வீடு புகுந்து தாக்கிய போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நிலத்தகராறில் திமுக பிரமுகரின் தூண்டுதலில் வீடு புகுந்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகியோர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் அறநிலையதுறைக்கு சொந்தமான முத்தாலம்மன் கோவில் இடத்தை மாட்டு தொழுவமாக பொன்ராஜ் என்பவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்பவரின் துணையோடு பட்டா வாங்கி தன் பெயருக்கு மாற்றமும் செய்துள்ளார். இந்த இடத்தில் வீடு கட்ட தொடங்கி கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டி, மற்றும் குடும்பத்தினர் கோயில் நிலத்தில் வீடு கட்டுவது குறித்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ், தங்கபாண்டி மற்றும் குடுத்தினர் மீது காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். பொன்ராஜ் மற்றும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னு ஆகியோரின் தூண்டுதலின் பேரில், வேடசந்தூர் ஆய்வாயர் வேலாயுதம் தலைமையிலான காவலர்கள் காவல்துறை உடை அணியாமல்  தங்கப்பாண்டி வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி விஜயா மற்றும் மகன் பிரபு என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து பலத்த காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முறையாக விசாரிக்காமல் காவல்துறை ஆராஜக போக்கில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Night
Day