க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வேலை விசயமாக திண்டுக்கல் சென்றுவிட்டு வேடசந்தூருக்கு தனியார் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைந்த போது, இளைஞர் ஒருவர் ராதாகிருஷ்ணன் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனை கண்ட அங்கிருந்த மக்கள் அவரை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பதும், அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...