திண்டுக்கல்லில் ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையல் அருகே கடந்த 28ம் தேதி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இர்பான் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இர்பானை கொலை செய்த ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் கைது செய்து, மாலப்பட்டி மயானம் பகுதியில் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது, ரவுடி ரிச்சர்ட் சச்சின், அருண் என்ற காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால், போலீசார் அவரின் வலது கால் முட்டி பகுதியில் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், காயமடைந்த ரிச்சர்ட் சச்சின் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

varient
Night
Day