தாய்லாந்து to சென்னை கஞ்சா கடத்திய தந்தை, மகன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு உயர் ரக கஞ்சாவை கடத்தி தந்தை, மகன் விற்பனை செய்து வந்துள்ளனா்.. ஒரு கோடி மதிப்பிலான கஞ்சாவுடன் மூன்று பேரை தனிப்படை காவல்துறையினா் தட்டி தூக்கியுள்ளனா். சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியவா்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் விமான நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது, தங்கம், கஞ்சா, மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை சட்டவிரோதமாக எடுத்து வருவது தொடர்கதையாக தான் இருக்கின்றது. 

அந்த வகையில், தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் உயர் ரக கஞ்சா கடத்தி வரப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஷ்ரா கர்க்கினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, மாங்காடு பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் சண்முகராஜ் என்பவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினா் விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

சண்முகராஜின் மகன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ஆகிய இருவரும் தாய்லாந்தில் இருப்பதாகவும், இவா்கள் இருவரும் உயர் ரக கஞ்சாவை, விமானத்தில் பயணிகள் போல் வரும் நபர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என வாக்குமூலம் அளித்தார்...

இதனை கார்த்திக்கின் தந்தையான சண்முகராஜன் உயர் ரக கஞ்சாவை வாங்கி கொண்டு சென்னையின் முக்கிய இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளதையும் காவல்துறையினா் கண்டுபிடித்தனர். 

சண்முகராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத் மற்றும் முஹம்மது ஜைனுல் ரியாஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட யாசர் அராபத் சுற்றுலா பயணி போன்று தாய்லாந்து நாட்டிற்கு சென்று, உயர் ரக கஞ்சா பார்சலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சிங்கப்பூர் சென்று, சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைவார்களாம்... பின்னா் அதனை தனியார் டிராவல்ஸ் பேருந்தின் உதவியோடு சென்னைக்கு கொண்டு வந்து கார்த்திக்கின் தந்தை சண்முகராஜிடம் ஒப்படைத்து  திரும்ப சென்று விடுவார்கள் என தெரியவந்தது.   

தாய்லாந்தில் உள்ள கார்த்திக் கூறும் தகவலின் அடிப்படையில்,  கஞ்சா பொட்டலங்களை முஹம்மது ஜைனுல் ரியாஸ் பிரித்துக் கொடுக்க, அவற்றை கொண்டு சென்று சண்முகராஜன் சப்ளை செய்துள்ளார்.  குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான மால்கள், திரையரங்கம் ஆகிய இடங்களில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. 

ஒரு கிராம் கஞ்சாவை தாய்லாந்தில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, சென்னையில் ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததாகவும்,  இதே போல கடந்த 1 மாத காலமாக கிலோ கணக்கில் கஞ்சாவை கொண்டு வந்து சென்னையில் சப்ளை செய்து வந்ததை காவல்துறையினா் கண்டுபிடித்துள்ளனர். 

உலகிலேயே தாய்லாந்தில் தான் கஞ்சா உபயோகம் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு கஞ்சாவை வைத்து, கஞ்சா இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் சாக்லேட் வடிவில் போதை தரும் கஞ்சா உணவுகள் என பலவித தயாரிப்புகள் விற்பனைக்கு தாய்லாந்தில் கிடைக்கின்றன. 

தாய்லாந்தில்  கஞ்சா ஒரு கிராம் ஒன்றிற்கு சென்னையில் பத்தாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அதன்படி இந்த கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1.6 கிலோ தாய்லாந்து கஞ்சா மதிப்பில், ஒரு கோடி ரூபாய் வரை விற்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சண்முக ராஜன் உட்பட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. 

Night
Day