தஞ்சை: வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கத்தியை காட்டி மிரட்டி 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி அணிந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புளியம்பேட்டை புவனேஸ்வர் நகரில் உள்ள உதயச்சந்திரன் வீட்டிற்கு சொகுசு காரில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் முகமூடி அணிந்து சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் 15 சவரன் நகை, குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சென்ற திருவிடைமருதூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day