க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
சென்னை திருவான்மியூரில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த யோவான், சென்னை அடையாறில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருவான்மியூரை சேர்ந்த 7 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் 11 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோவானை வரும் 16 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...