சென்னை: ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் மதிப்புடைய நான்கரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது விமான கழிவறையில் மின்சார ஒயர்கள் செல்லும் கேபிள் பாக்ஸ் திறந்திருப்பதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை செய்தபோது, கருப்பு டேப் சுற்றப்பட்ட பார்சலில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்கு பதிந்து, தங்கத்தை கடத்தியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day