க்ரைம்
அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி : தனியார் வங்கி ஊழியர் கைது...
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
சென்னையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், ஜல்லடையான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் 4 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்றிரவு பள்ளிக்கரணையில் உள்ள மதுபான விடுதிக்கு சென்ற பிரவீனை, ஷர்மியின் சகோதரர் தினேஷ் உட்பட 4 பேர் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து தினேஷ் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...