சென்னை : சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த புரோட்டின் பவுடர் விற்பனை கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சென்னை மாதவரம் அடுத்த கேகேஆர் கார்டன் பகுதியில் முத்தையா என்பவர் புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட நிலையில், கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்ப்பாலுடன் கூடுதலாக கலக்க வைத்திருந்த புரோட்டின் பவுடர்கள், வலி நிவாரணி மாத்திரைகள், 200-க்கும் மேற்பட்ட பாராசிட்டமால் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புரோட்டின் பவுடர் விற்பனை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையின் உரிமையாளர் முத்தையா கைது செய்யப்பட்ட நிலையில், யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day