தேவர் குருபூஜையில் பங்கேற்க மதுரை வருகை தந்த சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துவதற்காக மதுரை வருகை தந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, விமான நிலையத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,​ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று காலை 11.00 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சால்வை, பூங்கொத்து, தேவர் திருமகனாரின் புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Night
Day