தேவர் திருமகனார் சிலைக்கு குடியரசு துணை தலைவர் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரர் என்றும், அவரை போற்றுவது ஆன்மீகத்தையும், நல்லொழுக்கத்தையும் போற்றுவது போன்றது என்றும் புகழாரம் சூட்டினார். முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் புகழ் இந்த புவி உள்ள வரை நீடித்திருக்கும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 


Night
Day