தேவர் திருமகனார் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு புறப்பட்ட அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்தநாள் மற்றும் 63வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையிலிருந்து மதுரை சென்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இன்று காலை அழகர் கோவில் சாலையில் தங்கும் விடுதியில் இருந்து கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டார். அப்போது திரளான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு பொன்னாடைகள் மற்றும் மலர்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கோரிப்பாளையம் செல்லும் வழியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சாலையின் இருபுறங்களிலும் கழகக் கொடியுடனும், சின்னம்மா வாழ்க என்ற வாழ்த்து முழக்கத்துடனும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கழக மகளிர் அணியினர் கழக கொடியுடனும், சின்னம்மா புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பூசணிக்காயில் தீப ஆரத்தி எடுத்து புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகத்துடன் வரவேற்றனர். 

தொடர்ந்து, கோரிப்பாளையம் வந்தடைந்த சின்னம்மாவுக்கு கழக தொண்டர்களும், கழக நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து இளைஞர்களும், பெண்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தெப்பக்குளம் பகுதிக்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

பின்னர் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மருது சகோதர்கள் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா தீபாராதனை காட்டி வழிபட்டார்.

இதனையடுத்து, கழக தொண்டர் ஒருவருக்கு புரட்சித்தாய் சின்னம்மா கழக கொடியின் வண்ணம் பொறித்த துண்டை அணிவித்து மகிழ்ந்தார். 


Night
Day