எழுத்தின் அளவு: அ+ அ- அ
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு பயணம் மேற்கொண்ட அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவதற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு செல்லும் வழியில் கழக நிர்வாகிகள் பொன்னாடை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் கழுகர்கடை பகுதியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர்.
திருப்புவனம் பைபாஸ் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக தொண்டர்கள் சின்னம்மா வாழ்க என்ற வாழ்த்து முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் வன்னிக்கோட்டை பகுதியில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று சின்னம்மா வாழ்க என்ற முழக்கத்துடன் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
வில்லியாரேந்தல் பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு கூடியிருந்த சிறுவர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார். அப்போது இளைஞர்கள் சின்னம்மா வாழ்க என முழக்கங்கள் எழுப்பி மலர்கள் தூவி புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மாவுடன் இளைஞர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் திரண்டிருந்த பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கலச மரியாதை செலுத்தி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
தூய முத்துராமலிங்கபுரம் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் முத்ததேனந்தல் பகுதியில் கழக மகளிர் அணியினர் ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டை பகுதியில் சின்னம்மா வாழ்க என முழக்கமிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அப்பகுதியில் இருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்துடன் சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா சென்றபோது அவ்வழியாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சின்னம்மாவை கண்டு உற்சாகமடைந்து சின்னம்மா வாழ்க என முழக்கம் எழுப்பினர். புரட்சித்தாய் சின்னம்மாவும் பேருந்து பயணிகளை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து மானாமதுரை பகுதியில் திரண்டிருந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பசும்பொன்னை நோக்கி வாகனங்களில் பயணம் செய்தவர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கழக கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வழியில் சங்கமங்கலம் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து கழக நிர்வாகிகள் அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவும், பெண்களும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து மகிழ்ந்தனர்.
காட்டு எமனேஸ்வரம் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவை கண்டு வணங்கிய பெண்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து வழிமறிச்சான் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அவ்வூர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்துடன் சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.
அபிராமம் பகுதியில் திரண்டிருந்த அப்பகுதி மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை கண்டு உற்சாகமுடன் கைகளை அசைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அபிராமம் பகுதியில் இருக்கும் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கும் பூமாலையை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தொட்டு வணங்கி கொடுத்தார். பின்னர் அந்த மாலை தேவர் திருமகனாரின் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.