புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துவதற்காக மதுரை வருகை தந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர். பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Night
Day