சென்னை, சென்ட்ரல் : ரயிலில் கொண்டு வந்த ரூ.40 லட்சம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் ரொக்கப் பணத்தை 
பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் நடத்திய சோதனையில் ஹைதராபாத்தில் இருந்து ஞானவேல் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day