செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 57ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செப்டம்பர் 3ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து  நீதிபதி உத்தரவிட்டார்.

Night
Day