சாக்கு மூட்டையில் பெண் சடலம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் அவனியாபுரம் புறவழிச்சாலையில் சாக்கு பைக்குள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈச்சனேரி பகுதியில் சாக்கு பையில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டிருப்பது 40 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்துள்ளது. பெண்ணை கொலை செய்து சாக்கில் வைத்து வீசியது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day