க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறு காரணமாக மகளின் காய்கறி கடையை பெற்றோரே அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தாண்டவர்கோவில் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் உமா உளுந்தூர்பேட்டை - சென்னை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மகளுக்கும் அவரது பெற்றோருக்கும், பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உமாவின் தந்தை சண்முகமும், தாயார் செங்கேணியும் அவரது கடையில் இருந்த காய்கறிகளை வீசி எறிந்ததுடன், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...