க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே உள்ள தரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் நெல்லை மாவட்டம் மேலச்செவலை சேர்ந்த கீதா என்ற மாணவி செவிலியர் பணி பயிற்சி பெற்று வருகிறார். அவர், திடீரென மருத்துவமனை விடுதியில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு போலீசார் செல்லும் முன்னே மருத்துவமனை ஊழியர்கள் உடலை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, மாணவியின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் பெண் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது அண்மை காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...