கதிர் ஆனந்தின் கல்லூரியில் விடிய விடிய ED ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் துரைமுருகனின் மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரியில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

காட்பாடியில் உள்ள திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் மட்டும் 24 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

varient
Night
Day