க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள லேக்வுட் என்ற கிறிஸ்தவ ஆலயம் மிகப்பெரிய ஆலயமாகும். மக்கள் அதிகமாக கூடும் இந்த ஆலயத்திற்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண், ஒரு கையில் குழந்தையுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார். ஆலயத்திற்குள் வந்ததும் அந்த பெண் துப்பாக்கியால் சுட்டதால், பிரார்த்தனைக்காக கூடிய மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் அவருடைய கையில் இருந்த குழந்தை மற்றும் மற்றொரு நபருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...