அஜீத் குமார் வீட்டில் CBI அதிகாரிகள் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவரின் தாய் மற்றும் தம்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மீது நகை திருடுபோன வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல்நிலையம், மடப்புரம் கோவில் கோ சாலை பின்புறம் உள்ள பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி சிசிடிவி ஆதாராங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு தொடர்பாக உயிரிழந்த அஜித்குமாரின் தாயார், சகேதாரர் நவீன்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். அஜித்குமாரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அங்கு நவீன்குமார் மற்றும் அவரது தாயிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை ஆவணங்களை பதிவு செய்தவற்காக இருவரையும் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Night
Day