ஆணவக் கொலை - சுர்ஜித் மீது குண்டாஸ் பாய்ந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் வேறு சமூக பெண்ணை காதலித்த ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காதலியின் சகோதரர் சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொறியாளரான கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காதலித்த பெண்ணின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கொலையாளியின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்களான  தந்தை சரவணன், தாய் கிருஷ்ண குமரி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி 3-வது நாளாக கவினின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கவினை ஆணவக்கொலை செய்த காதலியின் சகோதரர் சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Night
Day