அக்காவை காதலித்த ஐ.டி ஊழியரை வெட்டிக் கொன்ற தம்பி

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்காவை காதலித்து வந்த ஐ.டி ஊழியரை தம்பி வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த  கவின் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கவினும், பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள ஒரு சித்த மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணும் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவின் அந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வெறு சமூகம் என்பதால் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் பெண்ணின் பெற்றோர் கவினுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் தனது குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் காதலி பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கே அழைத்து வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பெண்ணை பார்க்க வந்த கவினை தோழியின் சகோதரரான சுர்ஜித் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை ஓட ஓட விரட்டி தலை, முகம், முதுகு என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர்  பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குச் சென்று கவின் சரணடைந்தார். அப்போது வெவ்வேறு சமூகம் என்பதாலும், பல முறை எச்சரித்தும், காதலை கைவிடாததால், அக்காவை காதலித்தவரை வெட்டி கொன்றதாக தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Night
Day