உலகம்
வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யவில்லை எனில் இந்தியா மீது கூடுதலாக 20 முதல் 25% வரி - டிரம்ப் எச்சரிக்கை...
வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீது ...
தென் கொரியாவில் 5,000 பயிற்சி மருத்துவர்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்வதற்கான நடைமுறையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கும் அரசின் திட்டத்தைக் கண்டித்து, பயிற்சி மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவு சிரமங்களுக்கு ஆளாகினர். அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு பயிற்சி மருத்துவர்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பாமல் பிடிவாதமாக இருப்பதால், அவர்களில் முதற்கட்டமாக 5000 மருத்துவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து தென்கொரிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீது ...
நெல்லையில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மா?...