ஜப்பான் : விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறிய முதல் தனியார் செயற்கைகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானில் விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் செயற்கைகோள் புறப்பட்ட சில விநாடிகளிலேயே வெடித்து சிதறியது. ஜப்பான் நாட்டின் டோக்யோவை சேர்ந்த ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் நிறுவனம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிட்டு முதல் செயற்கை கோளை உருவாக்கி வந்தது. செயற்கைகோள் தயாரான நிலையில், திட எரிபொருள் கொண்டு இயங்கும் கெய்ரோஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் விண்ணில் ஏவப்பட்ட சில விநாடிகளில் 60அடி நீள ராக்கெட் வெடித்து சிதறியது. அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வெடித்து சிதறிய ராக்கெட்டின் பாகங்கள் எரிந்து கொண்டிருந்த நிலையில் ட்ரோன்கள் மூலம் நீருற்றி அணைக்கப்பட்டது. ஜப்பானில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட முதல் தனியார் செயற்கைகோள் வெடித்து சிதறியதால் அந்நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day