உலகம்
அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபட்ட ரஷ்யா
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. அதிபர் விளாதிமிர் புதினின் கடும் எதிர்ப்பாளரான நவல்னி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் வெளியாகவில்லை. அதேசமயம் நவல்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி மற்றும் தாயார் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், நவால்னியின் உடல் அடக்கம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...