சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில்  இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா சாஹேதியும் அடக்கம் என ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தாக்குதலில் கட்டிடம் முழுமையாக தகர்ந்து விட்டதாக கூறியுள்ள சிரியா பாதுகாப்புத்துறை இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களையும் சடலங்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

varient
Night
Day