கமலா ஹாரிஸ் கறுப்பரா அல்லது இந்தியரா என்பது எனக்கு தெரியாது - டிரம்ப் சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து சக போட்டியாளர் டொனால்டு டிரம்ப் எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் நடைபெற்ற தேசிய கறுப்பின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்பிடம் கறுப்பின வாக்காளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதனால், அவர் கறுப்பரா? அல்லது இந்தியரா? என்பது தனக்கு தெரியாது என்றும் எதுவாக இருந்தாலும் தான் மதிப்பதாக தெரிவித்தார். 

Night
Day