இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென, இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானிலும், ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் காசாவிலும் கொலை செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முக்கிய ஹமாஸ் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், அங்குள்ள இந்திய அதிகாரிகள் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day