இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் அமைந்துள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

நீண்டகால எதிரிகளான இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்து வரும் போர் 7-வது நாளாக நீடித்து வருகிறது . இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மருத்துவமனையின் வெளிப்புற பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், நோயாளிகள் சிகிச்சைக்கு வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

Night
Day