உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
இலங்கையைச் சேர்ந்த 60 வயது முதியவர் தனது தலை முடியாலும், தாடியாலும் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சாதனை படைத்தார். கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம், சுமார் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தாடி மற்றும் தலைமுடியிலால் ஆயிரம் மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றார். இந்த நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவன பிரதிநிதிகள் அங்கீகரித்து செல்லையா திருசெல்வத்திற்கு, விருதையும், பட்டயத்தையும் வழங்கினர். நிகழ்ச்சியில் வடமாகாண ஆளுநர் சார்லஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாதனை முதியவரை உற்சாகப்படுத்தினர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...