அமெரிக்‍காவில் சரக்‍கு கப்பல் மோதியதில் சேதமடைந்த ஃபிரான்சிஸ் ஸ்காட் கடல் பாலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்‍காவின் Maryland மாகாணம் பால்டிமோர் நகரில், ஃபிரான்சிஸ் ஸ்காட் கடல் பாலம் மீது, பெரிய சரக்‍கு கப்பல் ஒன்று வேகமாக மோதியதில் அந்தப் பாலம் கடுமையாக சேதமடைந்தது. Maryland போக்‍குவரத்து ஆணையம் இத்தகவலை வெளியிட்டிருப்பதோடு, இப்பகுதியில் போக்‍குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும், பாலம் மூடப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் இப்பாலத்தின் மீது செல்வதை தவிர்க்‍க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பாலம் சேதமடைந்த நேரத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த 10க்‍கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் விழுந்துவிட்டதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

varient
Night
Day