அமெரிக்க பணயக் கைதியை இன்று விடுவிக்கிறது ஹமாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க பணயக் கைதியை ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று விடுவிக்கவுள்ளனர். காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு 251 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடித்துச் செல்லப்பட்டவர்களில் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி வரு இஸ்ரேல் வாழ் அமெரிக்கரான இடன் அலெக்ஸாண்டரும் ஒருவர் ஆவார்.  அவரை விடுவிக்க அமெரிக்கா மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து அவரை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

Night
Day