அடுத்த மாதம் பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்புடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலின் போது குடியேற்ற விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை திரும்பப் பெறும் விவகாரத்தில் எது சரியோ அதை இந்தியா மேற்கொள்ளும் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் வர இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Night
Day