இந்தியா
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் அமளி - இரு அவைகளும் முடங்கியது...
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
23 நாய் இனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 23 நாய் இனங்களை இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், இனப்பெருக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த நாய்கள் தற்போது வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...