165 இடங்களில் மகா விகாஸ் அகாதி வெற்றி பெறும் - சஞ்சய் ராவத் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்பற்றும் என்று தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், இந்த தேர்தலில் மகா விகாஸ் அகாதிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 160 முதல் 165 எம்எல்ஏக்கள் கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். முதலமைச்சர் யார் என்பதற்கான ஃபார்முலா இதுவரை உருவாக்கப்படவில்லை என்றும், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர், மகா விகாஸ் அகாதி தலைவர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்றும் கூறினார். 

varient
Night
Day