ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் சேனல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பொது நலன் வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் யூடியூப் பயன்படுத்துகிறது. அண்மையில் நடைபெற்ற கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரணக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் அதனை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பியது. இந்நிலையில் முந்தைய விசாரணைகளின் வீடியோக்கள் ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ் ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களைக் காட்டுகிறது. இதனால் வழக்குகளை நேரலை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

varient
Night
Day