ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளிய இந்திய பங்குச்சந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குச்சந்தைகள் வரலாற்றில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை 4வது இடத்தை பிடித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளாக அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை விளங்கி வருவதுடன் நான்காவது இடத்தில் ஹாங்காங் பங்குச்சந்தை இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை வர்த்தக நேர முடிவில் ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை உலகின் 4வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக முன்னேறியுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு 4 புள்ளி 29 ட்ரில்லியன் டாலராக இருந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு 4 புள்ளி 33 ட்ரில்லியன் டாலராக உயர்ந்து ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது. 

Night
Day