வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கேரள மாநிலம் எடவண்ணாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே 2-ல் ஒரு தொகுதி எம்.பி. பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். அதில் வயநாடு தொகுதியை, ராகுல்காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடவண்ணாவில் ராகுல் காந்தி இன்று ரோடு ஷோ நடத்தினார். தொண்டர்களை நோக்கி கையசைத்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day