வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் கேரள முதலமைச்சர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசி, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day