ரூ.60 கோடி மோசடி செய்த இடைத்தரகரை தேடும் காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வீடுகளை குத்தகைக்கு எடுப்போரிடம் பணத்தை பெற்று உரிமையாளரிடம் செலுத்தாமல் 60 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். 

பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில், கெட்டினா ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த விவேக் கேசவன் என்பவர், வாடகைக்கு வீடு தேடுவோருக்கு வீடு தேடிக் கொடுப்பது; குத்தகைக்கு வீடுகளை ஏற்பாடு செய்துதரும் வேலையை செய்து வந்தார். இவர், எலக்ட்ரானிக் சிட்டி, பரப்பன அக்ரஹாரா, மாரத்தஹள்ளி உட்பட நகரின் பல பகுதிகளில், வீடுகளை குத்தகைக்கு எடுத்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்ற விவேக் கேசவன், அதனை வீட்டு உரிமையாளர்களிடம் கொடுக்காமல் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக் கேசவனை தேடி வருகின்றனர்.

Night
Day