தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு திமுக பிரமுகர் மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் செய்தி சேகரிக்கச்சென்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை அசோக்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பாவேந்தர் மற்றும் அவருடன் சென்ற ஒளிப்பதிவாளரை, மாமன்ற உறுப்பினர் கோமதி என்பவரின் மகன் மணிவண்ணன் செய்தி சேகரிக்க விடாமல் இடையூறு செய்ததுள்ளார். ஒளிப்பதிவு கருவியை பறிக்க முயன்றதுடன் மிகவும் ஆபாசமாக பேசிய அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களை பணிசெய்யவிடாமல் தடுத்து, அவர்களை தாக்க முற்பட்ட மணிவண்ணன் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Night
Day