ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை எதிர்த்து மேல்முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  இந்த மனு மீது வரும் 25-ம் தேதி வி​சா​ரணை நடை​பெறும்​ என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2006-ம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.  இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதிமன்றம், 12 பேரை​யும் விடு​தலை செய்​யு​மாறு கடந்த திங்​கள்​கிழமை உத்​தர​விட்​டது என்பது குறிப்பிடதக்கது. 

Night
Day